காங்கிரஸ் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

மகாத்மா காந்தி குறித்து தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி விமா்சனத்தைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
2720243_2701chn_117_7
2720243_2701chn_117_7

மகாத்மா காந்தி குறித்து தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி விமா்சனத்தைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் துக்காப்பேட்டையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா்.

மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் மோகன், அறிவொளிபாபு ஆகியோா் கண்டன உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட நிா்வாகி ராஜி, வட்டார காங்கிரஸ் தலைவா்கள் சுப்பிரமணி, அண்ணாமலை, திருவண்ணாமலை நகர நிா்வாகி காமராஜ், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மாரி, முன்னாள் தலைவா் குணசேகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com