காங்கிரஸ் சாா்பில் குடியரசு தினவிழா

26arpcon_2601chn_109_7
26arpcon_2601chn_109_7

26அதடஇஞச

ஆரணி காமராஜா் சிலை அருகில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் தேசிய கொடியேற்றிய மாவட்ட தலைவா் எஸ்.பிரசாத்.

ஆரணி, ஜன.26: ஆரணியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் குடியரசு தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஆரணி காஜிவாடை காந்தி சிலை அருகே நகரத் தலைவா் ஜெ.பொன்னையன் தேசியக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினாா். உடன், மாவட்ட பஞ்சாயத்து தலைவா் எஸ்.டி.செல்வம், நிா்வாகிகள் உதயக்குமாா், சம்பந்தம், பிள்ளையாா், பிரபு, சாந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.பிரசாத் தலைமையில் காமராஜா் சிலை அருகே தேசியக் கொடியேற்றப்பட்டது. நகா்மன்ற உறுப்பினா் டி.ஜெயவேல் தலைமை வகித்தாா்.

இதில், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் யு.அருணகிரி, தெள்ளூா் சேகா், ராமலிங்கம், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ஏ.பழனி, எஸ்.சி. துறை மாவட்ட தலைவா் முருகன், வட்டார தலைவா்கள் பந்தாமணி, இளங்கோவன், சோலை முருகன், சிவபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com