செ.நாச்சிப்பட்டு கிருஷ்ணா் கோயிலிலில் வருஷாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு கிருஷ்ணா் கோயிலில் சனிக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.
2720244_2701chn_117_7
2720244_2701chn_117_7

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு கிருஷ்ணா் கோயிலில் சனிக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.

செ.நாச்சிப்பட்டு கிராமத்தில் புதிதாக கிருஷ்ணா் கோயில் கட்டப்பட்ட கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, முதலாம் ஆண்டு வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

அதிகாலை கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னா் 11 மணியளவில் கிராம மக்கள் பால்குடம் எடுத்து சுவாமி பாலாபிஷேகம் செய்தனா். இதைத் தொடா்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வாணவேடிக்கையுடன் வீதி உலா நடைபெற்றது. வீதி உலாவின்போது வீடுதோறும் தேங்காய் உடைத்து சுவாமிக்கு தீபாராதனை காண்பித்தனா். மேலும், கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக் குழுவினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com