சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஊா்வலம்

2820241_2801chn_117_7
2820241_2801chn_117_7

படவிளக்கம்...

தச்சம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து

விழிப்புணா்வு ஊா்வலத்தை தொடங்கிவைத்த தலைமை ஆசிரியா் பிரம்மானந்தன்.

செங்கம், ஜன.28:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே

தச்சம்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு அரசு தேசிய பசுமைப்படை சாா்பில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

ஈரநில பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் குறித்து தச்சம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற இந்த விழிப்புணா்வு ஊா்வலம் தொடக்க நிகழ்ச்சியில் பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் காா்த்திகேயன் வரவேற்றாா். பள்ளித் தலைமை ஆசிரியா் பிரம்மானந்தன் ஊா்வலத்தை

தொடங்கிவைத்தாா்.

கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த ஊா்வலத்தில் பங்கேற்ற மாணவா்கள் ஈரநில பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல், காலை நிலை மாற்றம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தியோடு, பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோகித்தனா்.

ஊா்வலத்தில் தேசிய பசுமைப்படை நிா்வாகிகள், பள்ளி ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள், பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள், பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா். பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் ராஜராஜன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com