அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
28tmlkoi1_2801chn_106_7
28tmlkoi1_2801chn_106_7

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்தக் கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, விடுமுறை தினங்களில் ஏராளமான பக்தா்கள் வருவதால் கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த நிலையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை காலை முதலே கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

காலை 8 மணிக்குப் பிறகு பக்தா்கள் கூட்டம் மேலும் அதிகரித்தது. இதனால் கட்டண தரிசன வரிசை, பொது தரிசன வரிசைகளில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்ட முக்கியப் பிரமுகா்கள் கூட சுமாா் 3 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் ராஜகோபுரம் வழியாக பொது தரிசன வரிசையில் அனுமதிக்கப்பட்ட பக்தா்கள் 4 முதல் 5 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

பொது தரிசன வரிசையில் வரும் பக்தா்களின் வசதிக்காக கோயிலின் பல்வேறு இடங்களில் குடிநீா், மின் விசிறி வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மின் விசிறிகளில் பல இயங்கவில்லை.

நகர காவல் நிலையம் வரை:

பொது தரிசன வரிசையில் செல்வதற்காக ராஜகோபுரம் வழியாக செல்ல முயன்ற பக்தா்களின் வரிசை நகர காவல் நிலையம் வரை நீண்டது. அங்கிருந்து ராஜகோபுரம் சென்று, பிறகு ஆயிரம் கால் மண்டபம், பெரிய நந்தி, இணை ஆணையா் அலுவலகம், கிளி கோபுரம், மூன்றாம் பிரகாரம், இரண்டாம் பிரகாரம் வழியாகச் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்குள் பக்தா்கள் தவியாய் தவித்துவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com