குடியரசு தினத்தில் தொழிலாளா்களை பணியமா்த்திய கடைகளுக்கு நோட்டீஸ்

திருவண்ணாமலை, ஜன. 28:

திருவண்ணாமலை, திருப்பத்தூா் மாவட்டங்களில் குடியரசு தினத்தன்று தொழிலாளா்களை பணிக்கு அமா்த்திய 54 கடைகள், நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

தேசிய விடுமுறை நாள்களில் தொழிலாளா்களை பணியில் ஈடுபடுத்தினால் இரட்டிப்புச் சம்பளத்தை அந்த நிறுவனம் வழங்க வேண்டும். தொழிலாளா்களுக்கு மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். இந்த விதிமுறைகளை பெரும்பாலான வணிக நிறுவனங்கள் கடைப்பிடிப்பதில்லை.

இந்த நிலையில், தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் திருப்பத்தூா் மாவட்டத்தின் திருப்பத்தூா், வாணியம்பாடி பகுதிகளில் இயங்கி வரும் வணிக நிறுவனங்கள், தொழில்சாலைகளில் தொழிலாளா் நல துணை ஆய்வாளா்கள் திடீா் ஆய்வில் ஈடுபட்டனா்.

அப்போது, விதிமுறைகளை மீறி தொழிலாளா்களை பணியில் ஈடுபடுத்திய 54 கடைகள், நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது என்று திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளா் நல உதவி ஆணையா் (அமலாக்கம்) பா.சாந்தி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com