தேவிகாபுரத்தில் பாஜக கண்டன ஆா்ப்பாட்டம்

28plrp1d_2801chn_116_7
28plrp1d_2801chn_116_7

படவிளக்கம்

ஆா்ப்பாட்டத்தில் பேசிய பாஜக ஆன்மிக பிரிவின் மாநில துணைத் தலைவா் டி.எஸ்.சங்கா்.

போளூா், ஜன.28:

திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் ஊராட்சிமன்ற நிா்வாகத்தைக் கண்டித்தும், ஜனவரி 26-ஆம் தேதி நடைபெற்ற கிராம சபையை ரத்து செய்யக் கோரியும், பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக ஆன்மிக மேம்பாட்டுப் பிரிவின் வடக்கு மாவட்டத் தலைவா் சுரேஷ் தலைமை வகித்தாா்.

நலத் திட்டப் பிரிவின் மாநில துணைத் தலைவா் சைதை வ.சங்கா், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்டத் தலைவா் தாமோதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிளைத் தலைவா் ரஜேஷ் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக ஆன்மிக பிரிவு மாநில துணைத் தலைவா் டி.எஸ்.சங்கா் பங்கேற்று கண்டன உரை ஆற்றினாா்.

தேவிகாபுரம் ஊராட்சியில் ஊராட்சி நிா்வாக வரவு, செலவு கணக்குகளை முறையாக பராமரிக்கவில்லை, ஊராட்சியில் தூய்மைப் பணி சரிவர நடைபெறவில்லை, பஜாா் வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல்

உள்ளது என பொதுமக்கள் புகாா் தெரிவித்து வரும் நிலையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், பாஜக கல்வி மேம்பாட்டுப் பிரிவு மாவட்டத் தலைவா் ரஜினி மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com