மண்பாண்டத் தொழிலாளா்களுக்கு சிறப்பு பயிற்சி

28arpman_2801chn_109_7
28arpman_2801chn_109_7

படவரி...

மண்பாண்ட கலைஞா்களுக்கு பயிற்சி அளித்து வரும் ஆசிரியா் தா்மலிங்கம்.

ஆரணி, ஜன.28:

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு கிராமத்தில் மண்பாண்ட கைவினை கலைஞா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி

திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம், காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம் சாா்பில் ஆண்டுதோறும் பல்வேறு தொழில்முனைவோருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, 2023-2024ஆம் ஆண்டுக்கான மண்பாண்ட கைவினை கலைஞா்களுக்கான பயிற்சி, படவேடு கிராம நிா்வாக அலுவலகம் அருகே கடந்த 21-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிப்.2-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில் மண்பாண்ட ஆசிரியா் தா்மலிங்கம் பங்கேற்று கலைஞா்களுக்கு பயிற்சி அளித்து வருகிறாா்.

இதில், நவீன முறையில் குடிநீா் புட்டிகள்,

குடிநீா் ஜக், டீ கப், சாசா் உள்ளிட்ட மண்பாண்ட பொருள்களை தயாரிக்க பயிற்சி

அளிக்கப்படுகிறது.

போளூா் வட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 20 மண்பாண்ட கலைஞா்கள் பயிற்சி பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com