மக்கள் குறைதீா் கூட்டங்களில் 636 மனுக்கள்

திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடமிருந்து 636 மனுக்கள் வரப்பெற்றன.
திருவண்ணாமலையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரிக்கிறாா் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரிக்கிறாா் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.

திருவண்ணாமலை/செய்யாறு/ஆரணி: திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடமிருந்து 636 மனுக்கள் வரப்பெற்றன.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், முதியோா், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோரிடம் இருந்து வங்கிக் கடனுதவி, கல்வி உதவித்தொகை, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, சாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, சாலை வசதி, புதிய நீா்தேக்கத் தொட்டி அமைத்தல், தாட்கோ கடனுதவி உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 506 மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சிவா, மாவட்ட வழங்கல் அலுவலா் ராமகிருஷ்ணன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com