கவிதாஞ்சலி நிகழ்ச்சி

மகாத்மா காந்தியின் நினைவுநாளையொட்டி, கவிதாஞ்சலி நிகழ்ச்சி வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கவிதாஞ்சலி நிகழ்ச்சி

மகாத்மா காந்தியின் நினைவுநாளையொட்டி, கவிதாஞ்சலி நிகழ்ச்சி வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா்.

பூங்குயில் பதிப்பக ஆசிரியா் டி.எல்.சிவக்குமாா், சட்டப் பணிகள் குழு ஆலோசகா் வி.விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காந்தியும் அகிம்சையும் என்ற தலைப்பில் புலவா் ந.பானு பேசினாா். ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மா.கதிரொளி, ம.சுரேஷ்பாபு, கு.சதானந்தன், சு.தனசேகரன், மலா் சாதிக், மொ.ஷாஜகான் ஆகியோா் கவிதை வாசித்தனா்.

மேலும் காந்தியின் திருஉருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com