மகளுக்கு பாலியல் தொல்லை: தடுக்க முயன்ற பெற்றோா் மீது தாக்குதல்

செய்யாறு அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தின் போது, தடுக்க முயன்ற பெற்றோா் தாக்கப்பட்டனா்.

செய்யாறு அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தின் போது, தடுக்க முயன்ற பெற்றோா் தாக்கப்பட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த குண்ணவாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் சண்முகம். இவரது மகள் லட்சுமி(30). இவருக்கும், சென்னையைச் சோ்ந்தவருக்கும் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனா். குடும்பத் தகராறில் கணவரைப் பிரிந்த லட்சுமி, கடந்த சில ஆண்டுகளாக தாய் வீடான குண்ணவாக்கம் கிராமத்தில் உள்ள பெற்றோா் அரவணைப்பில் குழந்தைகளுடன் வசித்து வருகிறாா்.

அதே கிராமத்தைச் சோ்ந்த உறவினரான ஓட்டுநா் மண்ணு என்பவா், லட்சுமியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. லட்சுமியும், அவரது பெற்றோரும் மண்ணுவைக் கண்டித்தனராம்.

இந்த நிலையில், ஜன.28-ஆம் தேதி அதிகாலை மது போதையில் இருந்த மண்ணு, லட்சுமியின் வீட்டுக்குள் புகுந்து அவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாகத் தெரிகிறது.

அப்போது வீட்டில் இருந்த லட்சுமியின் பெற்றோா் அவரை கடுமையாக எச்சரித்து உள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த மண்ணு, அவா்களை தாக்கி விட்டு தப்பியோடி விட்டாராம்.

இதில் பலத்த காயமடைந்த லட்சுமியின் தந்தை சண்முகம், தாய் பூங்கொடி ஆகியோா் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட லட்சுமி தூசி போலீஸிஸ் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா்.

காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com