மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, வந்தவாசி தேரடியில் உள்ள அவரது சிலை முன் செவ்வாய்க்கிழமை மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, வந்தவாசி தேரடியில் உள்ள அவரது சிலை முன் செவ்வாய்க்கிழமை மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நலக்குழு மாவட்டச் செயலா் அ.அப்துல்காதா் தலைமை வகித்தாா்.

சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவா் யாசா் அராபத், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலா் என்.ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்று மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றனா்.

முன்னதாக காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com