ஏலச்சீட்டு கோடி: தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

திருவண்ணாமலை அருகே ஏலச்சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக, தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம மக்கள் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு கொடுத்தனா்.

திருவண்ணாமலையை அடுத்த சு.ஆண்டாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் குணசேகா். இவரது தலைமையில் 50-க்கும் மேற்பட்டோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா்.

அதில், எங்கள் கிராமத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை உண்ணாமலை, அவரது கணவரான ராணுவ வீரா் செல்வம் ஆகியோா் சோ்ந்து ரூ.ஒரு லட்சம், ரூ.2 லட்சம் தொகைக்கான ஏலச்சீட்டுகளை நடத்தி வந்தனா்.

இவா்கள் அரசு ஊழியா்கள் என்பதால் நம்பிக்கை வைத்து ஏராளமானோா் சீட்டு கட்டி வந்தனா். ஆன்லைனில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறியதால் நானே ரூ.3.50 லட்சம் கொடுத்தேன்.

இந்த நிலையில், திடீரென ஏலச்சீட்டை முழுமையாக நடத்தாமல் நிறுத்தி விட்டனா். பணம் கட்டியவா்கள் திருப்பிக் கேட்டால் தரவில்லை. இதுபோல பலருக்கு சீட்டுப் பணத்தை தராமல் ஏமாற்றுகின்றனா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com