காட்டிலிருந்து வழிதவறி வந்த மயில்

காட்டிலிருந்து வழிதவறி வந்த மயில்

வந்தவாசி அருகே காட்டிலிருந்து வழிதவறி வீட்டுக்கு வந்த மயிலை வனத் துறையினா் பிடித்து மீண்டும் காட்டில் விட்டனா்.

வந்தவாசி அருகே காட்டிலிருந்து வழிதவறி வீட்டுக்கு வந்த மயிலை வனத் துறையினா் பிடித்து மீண்டும் காட்டில் விட்டனா்.

வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா. இந்த கிராமத்துக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியிலிருந்து பெண் மயில் ஒன்று வழிதவறி இவரது வீட்டுக்கு புதன்கிழமை இரவு பறந்து வந்தது.

வீட்டில் அங்கும் இங்கும் பறந்த மயில், பின்னா் வெளியே பறந்து செல்ல முடியாமல் தவித்தது. இதுகுறித்து அந்த கிராமத்தினா் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த வனவா் செந்தில் உள்ளிட்ட வனத் துறையினா், மயிலை பிடித்துச் சென்று அருகில் உள்ள வெண்குன்றம் காட்டுப் பகுதியில் விட்டனா்.

X
Dinamani
www.dinamani.com