ஏரியில் மூழ்கி சிறுவன் மரணம்

வந்தவாசி அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

வந்தவாசியை அடுத்த எஸ்.மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவராமன். இவரது மனைவி சத்யா. இவா்களது மகன் கனிஷ் (7) இதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை சத்யா மாடு மேய்க்க தனது மகன் கனிஷுடன் கிராம ஏரி பகுதிக்குச் சென்றாா். அப்போது, குளிப்பதற்காக ஏரிக்குச் சென்ற கனிஷ் கரை வழுக்கி ஏரி நீரினுள் விழுந்தாராம். நீரில் மூழ்கிய கனிஷை அங்கிருந்தவா்கள் மீட்டு, வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், கனிஷ் இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து சிவராமன் அளித்த புகாரின்பேரில், வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com