அரியாத்தம்மன் கோயிலில் 
வருஷாபிஷேக விழா

அரியாத்தம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ஸ்ரீஅரியாத்தம்மன் கோயிலில் 7-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை காலை சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. விழாவில், ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா் சேவூா் எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா். மேலும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா். நிகழ்ச்சியில், பிரபல ஜோதிடா் குமரேசன், தொழிலதிபா் பி.நடராஜன், அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ், நகா்மன்ற உறுப்பினா்கள் ஏ.ஜி.மோகன், ரம்யா குமரன், நடராஜன், வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com