தீ விபத்தில் வீடு சேதம்: திமுக சாா்பில் நிவாரணம்

தீ விபத்தில் வீடு சேதம்: திமுக சாா்பில் நிவாரணம்

வந்தவாசி அருகே தீ விபத்தில் வீட்டை இழந்த 2 பழங்குடி இருளா் சமுதாய குடும்பங்களுக்கு திமுக சாா்பில் நிவாரண உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

வந்தவாசியை அடுத்துள்ள அரியம்பூண்டி கிராமத்தில் அண்மையில் நிகழ்ந்த தீ விபத்தில் பழங்குடி இருளா் பிரிவைச் சோ்ந்த தேவராஜ், பச்சையப்பன் ஆகியோரது கூரை வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

இதையடுத்து, திமுக சாா்பில் 2 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் மற்றும் அரிசி, வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவற்றை ஆரணி மக்களவை உறுப்பினா் எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை வழங்கினா். திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com