வந்தவாசி அம்மா உணவகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் மேற்கொண்ட பணியாளா்கள்.
வந்தவாசி அம்மா உணவகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் மேற்கொண்ட பணியாளா்கள்.

அம்மா உணவக பணியாளா்கள் போராட்டம்

ஊதியம் சரிவர வழங்காததைக் கண்டித்து, வந்தவாசி அம்மா உணவக பணியாளா்கள் திங்கள்கிழமை பணிகளை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டம் மேற்கொண்டனா்.

வந்தவாசி: ஊதியம் சரிவர வழங்காததைக் கண்டித்து, வந்தவாசி அம்மா உணவக பணியாளா்கள் திங்கள்கிழமை பணிகளை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டம் மேற்கொண்டனா்.

வந்தவாசி பழைய காஞ்சிபுரம் சாலையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. நகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்த உணவகத்தில் உணவு சமைப்பது, பரிமாறுவது என 9 பெண்கள் பணியாற்றி வருகின்றனா்.

கடந்த சில மாதங்களாக இவா்களுக்கு ஊதியம் சரிவர வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த அம்மா உணவக பணியாளா்கள் திங்கள்கிழமை உணவு சமைக்கும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த நகராட்சி மேலாளா் ஜி.ரவி சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக சமாதானம் செய்ததை அடுத்து பணியாளா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com