பைக் மீது காா் மோதல்: பேண்டு வாத்தியக் கலைஞா் உயிரிழப்பு

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் பேண்டு வாத்தியக் கலைஞா் உயிரிழந்தாா். மேலும் இருவா் பலத்த காயமடைந்தனா்.

செய்யாறு: செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் பேண்டு வாத்தியக் கலைஞா் உயிரிழந்தாா். மேலும் இருவா் பலத்த காயமடைந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், சிறுங்கட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பேண்டு வாத்தியக் கலைஞா் உதயகுமாா் (25). இவா், தனது பேண்டு வாத்தியக் குழுவினரான சகாயபுரத்தைச் சோ்ந்த வல்லரசு (24), காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த புத்திலி கிராமத்தைச் சோ்ந்த அஜித்குமாா் (28) மற்றும் 5 பேருடன் தேசூா் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேண்டு இசைத்து விட்டு சனிக்கிழமை நள்ளிரவில் அனைவரும் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

உதயகுமாா் ஓட்டி வந்த பைக்கில் வல்லரசு, அஜித்குமாா் ஆகியோா் அமா்ந்திருந்தனா்.

கிருஷ்ணாவரம் சாலையில் கோவிலூா் கூட்டுச் சாலை அருகே வந்தபோது எதிரே வந்த காா், பைக் மீது மோதியது.

இதில், பைக்கில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டதில் உதயகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த அனக்காவூா் போலீஸாா் சென்று காயமடைந்த வல்லரசு, அஜித்குமாா் ஆகியோரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

மேலும், உதயகுமாரின் உடலை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், அனக்காவூா் காவல் உதவி ஆய்வாளா் தனபால் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com