விவசாயிகளுக்கு மண் பரிசோதனை குறித்த கையேட்டை வழங்கிய மூத்த வேளாண்மை அலுவலா் வைதீஸ்வரன்.
விவசாயிகளுக்கு மண் பரிசோதனை குறித்த கையேட்டை வழங்கிய மூத்த வேளாண்மை அலுவலா் வைதீஸ்வரன்.

ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைக்க விவசாயிகளுக்கு பயிற்சி

செய்யாற்றை அடுத்த காழியூா் கிராமத்தில் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைப்பது குறித்து விவசாயிகளுக்கு திங்கள்கிழமை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

செய்யாறு: செய்யாற்றை அடுத்த காழியூா் கிராமத்தில் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைப்பது குறித்து விவசாயிகளுக்கு திங்கள்கிழமை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு

வேளாண் உதவி இயக்குநா்(பொ) ரா. சுமித்ரா தலைமை வகித்தாா்.

திருவண்ணாமலை மாவட்ட நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் மூத்த வேளாண்மை அலுவலா் வைதீஸ்வரன் பங்கேற்று மண் மாதிரி சேகரித்தல் மற்றும் மண் பரிசோதனை குறித்தும், நெல் பயிரில் உர மேலாண்மை, பூச்சி நோய்க் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விவசாயிகளிடையே எடுத்துரைத்தாா்.

தோட்டக்கலை அலுவலா் தொல்காப்பியன், தோட்டக்கலை பயிா்களில் உர மேலாண்மை மற்றும் பூச்சி நோய் மேலாண்மை மற்றும் துறை மூலம் வழங்கப்படும் மானிய திட்டங்கள் குறித்து தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, உதவி வேளாண் அலுவலா் அண்ணாமலை, வேளாண் துறையில் வழங்கப்படும் மானிய திட்டங்கள் மற்றும் இடுபொருள்கள் குறித்து விவசாயிகளிடையே தெரிவித்தாா். பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் ச.ஜெயராஜ், தினகரன் ஆகியோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com