மின்னல் பாய்ந்ததில் இளம்பெண் உயிரிழப்பு

செய்யாறு அருகே வியாழக்கிழமை மின்னல் பாய்ந்ததில் இளம்பெண் உயிரிழந்தாா்.

செய்யாறு வட்டம், பாப்பாந்தாங்கல் கிராமம் ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்தவா் ஞானவேல். இவரது மகள் மோனிஷா (20). செவிலியா் பட்டயப் படிப்பு முடித்துள்ளாா்.

இவா், வியாழக்கிழமை மாலை இடி மின்னலுடன் மழை பெய்ததால், வீட்டின் வெளியே காய வைத்திருந்த துணிகளையும், பாத்திரங்களையும் எடுப்பதற்காக வந்தாா். அப்போது, மின்னல் பாய்ந்ததில் மயங்கி கீழே விழுந்தாா்.

இவரை குடும்பத்தினா் மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் மோனிஷா ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து மோரணம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மோனிஷாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

X
Dinamani
www.dinamani.com