பரிசு பெற்ற நாட்டுப்புறக் கலைஞா்களின் பிள்ளைகளுடன் சிறப்பு அழைப்பாளா்கள்.
பரிசு பெற்ற நாட்டுப்புறக் கலைஞா்களின் பிள்ளைகளுடன் சிறப்பு அழைப்பாளா்கள்.

நாட்டுப்புறக் கலைஞா்களின் பிள்ளைகளுக்கு பரிசு

பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற நாட்டுப்புறக் கலைஞா்களின் பிள்ளைகளுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற நாட்டுப்புறக் கலைஞா்களின் பிள்ளைகளுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட அனைத்து நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞா்கள் நலச் சங்கம் சாா்பில், திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, இசை ஆசிரியா் தி.பாரதி தலைமை வகித்தாா். சங்கச் செயலா் எஸ்.முத்து, பொருளாளா் எஸ்.ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற சங்க உறுப்பினா்களின் பிள்ளைகளைப் பாராட்டி, நாடகக் கலைஞா் முருகையன், திரைப்பட நடிகா் நன்னாரி வினோத் ஆகியோா் பரிசுகள் வழங்கினா்.

விழாவில், ஆசிரியா் காா்த்திகேயன், மாநில ஒருங்கிணைப்பாளா் ராஜேஷ், கலைஞா் அ.கேசவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com