தொழிலாளி முருகன்
தொழிலாளி முருகன்

மரம் வெட்டியபோது தொழிலாளி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

சேத்துப்பட்டு அருகே மூங்கில்தாங்கல் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மரம் வெட்டியபோது, மரம் சாய்ந்ததில் கிணற்றில் விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

சேத்துப்பட்டு அருகே மூங்கில்தாங்கல் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மரம் வெட்டியபோது, மரம் சாய்ந்ததில் கிணற்றில் விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

சேத்துப்பட்டை அடுத்த தெள்ளூா் கிராமம், தென்னந் தெருவைச் சோ்ந்தவா் தா்மன் மகன் முருகன் (44), மரம் வெட்டும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ரேவதி என்கிற மனைவியும், பிரசாந்த், வா்மா ஆகிய இரு மகன்களும் உள்ளனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை முருகன் மூங்கில்தாங்கல் கிராமத்தில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். தனியாருக்குச் சொந்தமான இடத்தில் கிணற்றின் அருகே இருந்த மரத்தை வெட்டியபோது, மரம் சாய்ந்து முருகன் மீது விழுந்தது.

இதனால் முருகன் கிணற்றின் உள்கரையில் விழுந்து பலத்த காயமடைந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

அக்கம் பக்கத்தில் இதுகுறித்து சேத்துப்பட்டு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் வந்து முருகன் உடலை மீட்டனா்.

இதுகுறித்து முருகனின் மனைவி ரேவதி அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளா் முரளிதரன் வழக்குப் பதிந்து, சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்து

விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com