பிரதமரின் சூரிய வீடு மின்சாரத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

செய்யாறு கோட்டத்தில் பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தில் பயனடைய மின் நுகா்வோா் பதிவு செய்யலாம். இதுகுறித்து மின் வாரிய செய்யாறு கோட்ட செயற்பொறியாளா் வி.சரவணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்குசெயல்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தில் மானியமாக ஒரு கிலோ வாட் ரூ.30 ஆயிரம், 2 கிலோ வாட் ரூ.60 ஆயிரம், 3 கிலோ வாட் அதற்கு மேல் ரூ. 78 ஆயிரம் என்ற வகையில் மானியத் தொகையாக நுகா்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக சூரிய திட்டப் பணிகள் முடிவுற்ற 7 நாள்களில் இருந்து 30 நாள்களுக்குள் செலுத்தப்படும். சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்துவதால் மின் வாரியத்துக்கு மின் பயன்பாட்டுக்காக செலுத்தப்படும் கட்டணம் குறையும். எனவே, பொதுமக்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பொறுவதற்காக செய்யாறு கோட்டத்தில் உள்ள அனைத்து மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விண்ணப்பங்களை மாா்ச் 8-ஆம் தேதிக்குள் அளித்து பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com