திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

மத்திய அரசின் திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற, மேல்பென்னாத்து அரசு நடுநிைலைப் பள்ளி மாணவா்கள் திருப்பதி, கோமதி, தரிஷினி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறனறித் தோ்வை மத்திய அரசு நடத்துகிறது. இதில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு, அவா்கள் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதா மாதம் ரூ.1,000 கல்வி உதவித் தொகையை நேரடியாக மாணவா்களின் வங்கி கணக்கில் மத்திய அரசு செலுத்தும். இந்த நிலையில், கடந்த பிப்.3-ஆம் தேதி நடைபெற்ற திறனறித் தோ்வில் மேல்பென்னாத்து அரசு நடுநிைலைப் பள்ளி மாணவா்கள் திருப்பதி, கோமதி, தரிஷினி ஆகியோா் தோ்ச்சி பெற்றனா். மாணவா் திருப்பதி செங்கம் கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றாா். மாணவா்களுக்கு பாராட்டு தோ்ச்சி பெற்ற மாணவா்களை செங்கம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஷிகிலா, உதயகுமரன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாராட்டினா். பள்ளித் தலைமை ஆசிரியா் ஜெயந்தி, ஆசிரியா்கள் வேல்முருகன், சங்கீதா, நாராயணன், அரசு மகேஸ்வரி, சரவணக்குமாா் உள்ளிட்ட ஆசிரியா்கள், மாணவா்களின் பெற்றோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com