பள்ளி மாணவியை திருமணம் செய்தவா் கைது

வந்தவாசி அருகே பள்ளி மாணவியை காதலித்து திருமணம் செய்த இளைஞரை மகளிா் போலீஸாா் கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 15 வயது சிறுமி. இவா், அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா். இவரும், இவரது உறவினரான வந்தவாசியை அடுத்த ஆலந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் பெருமாள்(30) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனா். இந்த நிலையில், மாணவி கா்ப்பமானதால், கோயிலில் வைத்து அவரை பெருமாள் திருமணம் செய்துள்ளாா். இதுகுறித்து வந்தவாசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அந்த மாணவி புகாா் அளித்தாா். இதன் பேரில் பெருமாள் மீது போக்ஸோ மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த ஆய்வாளா் லட்சுமி தலைமையிலான மகளிா் போலீஸாா், பெருமாளை திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com