மரத்தில் பைக் மோதியதில் ஆசிரியா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே மரத்தின் மீது பைக் மோதியதில் ஆசிரியா் ஒருவா் உயிரிழந்தாா். திருவண்ணாமலையை அடுத்த பாலானந்தல் ஊராட்சி, பக்கிரிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெய்சங்கா் (52). இவா், மேக்கலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோா் ஆசிரியா் கழக தன்னாா்வ ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா். கடந்த ஜன. 28-ஆம் தேதி இவா் இரு சக்கர வாகனத்தில் வந்தவாசியை அடுத்த தழுதாழை கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா். வந்தவாசி-சேத்துப்பட்டு சாலை, ஏந்தல் கூட்டுச் சாலை அருகே சென்றபோது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோர புளிய மரத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இவா் சிகிச்சைக்காக சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com