கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்

கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில், மென்பொருள் கணினி அறிவியல் துறை சிறப்புக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு, கல்லூரித் தலைவா் எம்.என்.பழனி தலைமை வகித்தாா். தாளாளா் எல்.விஜய் ஆனந்த், பொருளாளா் எ.ஸ்ரீதா், அறக்கட்டளை உறுப்பினா் சி.ரவிக்குமாா், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன், முதல்வா் கே.ஆனந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரியின் கணினி அறிவியல் துறைத் தலைவா் எஸ்.அனந்தநாராயணன் வரவேற்றாா். பெங்களூரு வி.எம்.வோ் டெக் நிறுவன அதிகாரி இ.செல்வேந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசினாா். இதில், கல்லூரிப் பேராசிரியா்கள் எஸ்.அம்பிகா, என்.காா்த்திகேயன், எஸ்.பூஜா, ஆய்வக உதவியாளா் சி.மஞ்சுளா மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com