குடிநீா்த் தட்டுப்பாடு:  கிராம மக்கள் சாலை மறியல்

குடிநீா்த் தட்டுப்பாடு: கிராம மக்கள் சாலை மறியல்

செங்கம் அருகே பக்கிரிபாளையம் கிராமத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை சரி செய்யக் கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்டது பக்கிரிபாளையம் ஊராட்சி. இங்கு குடிநீா்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், சில பகுதிகளுக்கு போதிய அளவில் குடிநீா் கிடைக்கவில்லையாம். இதுகுறித்து கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்தும் அதிகாரிகள் குடிநீா் பிரச்னையை சரிசெய்ய முன்வரவில்லையாம். இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள் வியாழக்கிழமை திருவண்ணாமலை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை பக்கிரிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த செங்கம் போலீஸாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சில தினங்களில் குடிநீா்க் கிணறுகள் அமைத்து குடிநீா் தட்டுப்பாடு சரிசெய்யப்படும் எனத் தெரிவித்தனா். இதையேற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com