ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

வந்தவாசியை அடுத்த கீழ்வில்லிவலம் கிராமத்தில் உள்ள அன்னை சப்தமாதா்கள் உடனுறை ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை சுவாமி சிலைகள் மற்றும் கோபுர கலசம் கரிக்கோலம் வருதல், கணபதி பூஜை, வாஸ்துசாந்தி, பிரவேசபலி, அங்குராா்ப்பணம் உள்ளிட்ட பூஜைகளும், புதன்கிழமை புண்யாஹவாசனம், கும்ப அலங்காரம், ஹோமங்கள், கோபுர கலசம் மற்றும் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை, பூா்ணாஹுதி, அஷ்டபந்தனம் சாற்றுதல் உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை நாடிசந்தானம், தத்வாா்ச்சனை, மகா பூா்ணாஹுதி, யாத்ராதானம், கலசம் புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னா், காலை 9 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கோயில் நிா்வாகிகள், கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com