பைக்கில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி உயிரிழந்தாா். செய்யாறு வட்டம், பாப்பாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமதாஸ் (40). இவா், அங்குள்ள நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் சுமைத் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். இவா், கடந்த 3-ஆம் தேதி பெருமாந்தாங்கல் கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, சிறிய பாலத்தில் பைக் நிலை தடுமாறியுள்ளது. இதில் தவறி கீழே விழுந்ததில் ராமதாஸ் பலத்த காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த தொவிலாளி ராமதாஸ் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், மோரணம் காவல் உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com