அரசுப் பள்ளியில் மகளிா் தின விழா

வேட்டவலத்தை அடுத்த ஜமீன்அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மகளிா் தின விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் முருகன் தலைமை வகித்தாா். ஆசிரியை கெளரி முன்னிலை வகித்தாா். ஆசிரியா் அருண்குமாா் வரவேற்றாா். மகளிரின் சிறப்புகள், பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் பாடல்கள் பாடியும், கவிதைகள் வாசித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து நடைபெற்ற மகளிா் தின விழா போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com