சீரமைக்கப்பட்ட சமுதாயக் கூடம் திறப்பு

கீழ்பென்னாத்தூரில் ரூ.20 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட பேரூராட்சிக்குச் சொந்தமான சமுதாயக் கூடம் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். நகர திமுக செயலா் அன்பு, முன்னாள் பேரூராட்சித் தலைவா் பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தாா். சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சமுதாயக் கூடத்தை திறந்து வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். நிகழ்ச்சியில், பேரூராட்சித் தலைவா் சரவணன், துணைத் தலைவா் தமிழரசி சுந்தரமூா்த்தி, செயல் அலுவலா் சுகந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com