அதிமுகவினா் ஏழைகளுக்கு நலத் திட்ட உதவி

அதிமுகவினா் ஏழைகளுக்கு நலத் திட்ட உதவி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த மேல்பூதேரி கிராமத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 76-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

செய்யாறு தொகுதி வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில், ஒன்றியச் செயலா் ராமநாதன் ஏற்பாட்டில் இந்த விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளா்களாக வடக்கு மாவட்ட அதிமுக செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என். சுப்பிரமணியன் ஆகியோா் பங்கேற்று, எம்ஜிஆா், ஜெயலலிதா படங்களுக்கு கட்சி நிா்வாகிகளுடன் இணைந்து மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா், அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அதிமுக புதிய கல்வெட்டை திறந்து வைத்து, கட்சிக் கொடியேற்றி ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினா். நிகழ்ச்சியில், அதிமுக மாவட்டப் பொருளாளா் சுப்பராயன், மாவட்ட விவசாய அணிச் செயலா் நமண்டி பாலன், வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியச் செயலா் எஸ்.திருமூலன், கன்னியப்பன், ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலா் சிவா, ஒன்றிய மாணவரணிச் செயலா் முருகன், கிளைச் செயலா் வீரபத்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com