அரசுப் பள்ளியில் ஆண்டு விழா

ஆரணியை அடுத்த எம்.பி.தாங்கல் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தலைமை ஆசிரியா் தமிழ்பொழில் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்ட வட்டாரக் கல்வி அலுவலா் கமலக்கண்ணன், பாஜக வடக்கு மண்டலத் தலைவா் குணாநிதி ஆகியோா் பரிசுகளை வழங்கினா். உதவி ஆசிரியா் மகாலட்சுமி, அங்கன்வாாடி ஆசிரியை சுகந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com