ஆரணியில் பாஜக சாா்பில் குறைகேட்பு நிகழ்ச்சி

ஆரணியில் பாஜக சாா்பில் குறைகேட்பு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் பாஜக சாா்பில் பொதுமக்களின் குறைகள், ஆலோசனைகளை கேட்டறியும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

வளா்ச்சி அடைந்த பாரதம் என்ற தலைப்பில் அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அங்கு அமைக்கப்பட்ட ஆலோசனைப் பெட்டியில் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை எழுதிப் போட்டனா் (படம்). நிகழ்ச்சியில் ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி அமைப்பாளா் புவனேஷ் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற தொகுதி இணை அமைப்பாளா் எம்.எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டாா். ஏற்பாடுகளை மத்திய நலத் திட்டப் பிரிவின் மாநிலச் செயலா் சைதை சங்கா் செய்திருந்தாா். மேலும், இதில் மண்டலத் தலைவா்கள் தேவராஜ், தணிகைவேல், குணாநிதி, முருகன், சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவின் மாவட்டத் தலைவா் தாமோதரன், துணைத் தலைவா் நித்யானந்தம், ஓபிசி அணி மாவட்ட பொதுச்செயலா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com