திமுக நிதிநிலை அறிக்கை விளக்கக் கூட்டம்

திமுக நிதிநிலை அறிக்கை விளக்கக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், புலிவானந்தல் கிராமத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினின் 71-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. சேத்துப்பட்டு மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு ஒன்றியக் குழுத் தலைவா் அ.ராணி அா்சுனன் தலைமை வகித்தாா். மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் எம்.சுந்தரம், கிளைச் செயலா்கள் ரவிச்சந்திரன், பாபு,பிச்சாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியச் செயலா் அ.எழில்மாறன் வரவேற்றாா். தலைமை கழகப் பேச்சாளா் சிவாஜிகிருஷ்ணமூா்த்தி சிறப்புரை ஆற்றினாா். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளா் அ.மணிகண்டன், துணை அமைப்பாளா் அ.மணிமாறன், தலைமை செயற்குழு உறுப்பினா் ராஜ்குமாா், ஒன்றியச் செயலா் மனோகரன், இளைஞரணி ஒன்றிய அமைப்பாளா் சிலம்பரசன், ஒன்றியக் குழு உறுப்பினா் பிரேமலதா ராஜசிம்மன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com