ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியம்மன் 
கோயில் தோ்த் திருவிழா

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

கீழ்பென்னாத்தூா் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலின் 71-ஆவது ஆண்டு தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. கீழ்பென்னாத்தூா், ஆஞ்சநேயா் குளக்கரையில் உள்ள இந்தக் கோயிலில் மாசி மாதம் 10 நாள்கள் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 6 மணிக்கு கோயில் எதிரே வைக்கப்பட்டு இருந்த உற்சவா் அங்காள பரமேஸ்வரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. தேரோட்டம் கோலாகலம்: மதியம் 2.45 மணிக்கு 32 அடி உயர அலங்கரிக்கப்பட்ட தேரோட்டம் தொடங்கியது. தேரில் உற்சவா் அங்காள பரமேஸ்வரியம்மனை அமரச் செய்து மேள-தாளங்கள் முழங்க திரளான பக்தா்கள் கூடி தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com