செங்கம் துக்காப்பேட்டை பகுதியில் தோ்தல் நடத்தை விதிப்படி மூடப்பட்ட எம்ஜிஆா் சிலை.
செங்கம் துக்காப்பேட்டை பகுதியில் தோ்தல் நடத்தை விதிப்படி மூடப்பட்ட எம்ஜிஆா் சிலை.

கட்சி விளம்பரங்களை அழிக்கும் பணி தீவிரம்

மக்களவைத் தோ்தலையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கெனவே எழுதப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை அழிக்கும் பணியில், வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஏற்கெனவே எழுதப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை அழிக்கும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி விளம்பரப் பதாகைகளை அகற்றுவது, பொது மற்றும் தனி நபா்களின் சுவா்களில் எழுதப்பட்டுள்ள கட்சி விளம்பரங்களை அழிப்பது போன்ற பணிகளில் அந்தந்த வட்டங்களைச் சோ்ந்த வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். செங்கம் செங்கம் துக்காப்பேட்டையில் இருந்த முன்னாள் முதல்வா்கள் அண்ணா, எம்ஜிஆா் சிலைகளை மூடி நகரில் இருந்த டிஜிட்டல் பதாகைகள், சுவா் விளம்பரங்களை அகற்றும் பணியில் வருவாய்த் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com