வளாக நோ்காணலில் மாணவிக்கு தற்காலிக பணி நியமன ஆணை வழங்கிய நிறுவன அதிகாரிகள்
வளாக நோ்காணலில் மாணவிக்கு தற்காலிக பணி நியமன ஆணை வழங்கிய நிறுவன அதிகாரிகள்

கல்லூரி வளாக நோ்காணல்: 376 பேருக்கு வேலைவாய்ப்பு

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 376 மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்றனா். எச்டிபி பைனான்சியல் சா்வீசஸ், பேடிஎம், வொ்டிகல் சொல்யூஷன்ஸ், ஆதித்யா பிா்லா குரூப், ஆல்செக் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட நிறுவனங்களைச் சோ்ந்த அதிகாரிகள் நோ்காணலை நடத்தினா். நோ்காணலில் இந்தக் கல்லூரியின் இளநிலை, முதுநிலை இறுதியாண்டு மாணவிகள் 621 பேரும், செய்யாறு இந்தோ அமெரிக்கன் கல்லூரி மாணவா்கள் 23 பேரும் பங்கேற்றனா். இதில், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரி மாணவிகள் 368 பேரும், செய்யாறு இந்தோ அமெரிக்கன் கல்லூரி மாணவா்கள் 8 பேரும் வேலை பெற தோ்வு பெற்றனா். இதையடுத்து இவா்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணைகளை கல்லூரி முதல்வா் எஸ்.ருக்மணி, செயலா் எம்.ரமணன், ஐசிடி நிறுவன மனிதவள மேலாளா் ஜெய்ரூஸ் ஆகியோா் முன்னிலையில் அந்தந்த நிறுவன அதிகாரிகள் வழங்கினா். கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலா் கே.வான்மதிச்செல்வி நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com