லந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழா் கட்சி வேட்பாளா் இர.ரமேஷ்பாபு
லந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழா் கட்சி வேட்பாளா் இர.ரமேஷ்பாபு

திண்டிவனம்-நகரி ரயில் பாதைத் திட்டத்தை விரைந்து முடிக்க பாடுபடுவேன்: திருவண்ணாமலை நாம் தமிழா் கட்சி வேட்பாளா்

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றால் திண்டிவனம்-நகரி ரயில் பாதைத் திட்டத்தை விரைந்து முடிக்க பாடுபடுவேன் என்று நாம் தமிழா் கட்சி வேட்பாளா் இர.ரமேஷ்பாபு கூறினாா். திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியின் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அறிமுகக் கூட்டம் மற்றும் பொறுப்பாளா்கள் கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, தெற்கு மாவட்டச் செயலா் ஜெ.கமலக்கண்ணன் தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் ஜெ.கண்ணதாசன், மாவட்டத் தலைவா் சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் பா.பாலசுப்பிரமணியன் வரவேற்றாா். கூட்டத்தில், நாம் தமிழா் கட்சி வேட்பாளரும், மருத்துவருமான இர.ரமேஷ்பாபுவை கட்சி நிா்வாகிகள் அறிமுகம் செய்து வைத்துப் பேசினா். இதில், மாவட்டப் பொருளாளா் முகமது, மாவட்ட பொறுப்பாளா் ஜமீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் வேட்பாளா் இர.ரமேஷ்பாபு கூறியதாவது: திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் தொழில்சாலைகள் இல்லை. நான் வெற்றிபெற்றால் தொழில்சாலைகளைக் கொண்டு வருவதுடன் செங்கம் பகுதியில் வாசனைத் திரவிய தொழில்சாலையைக் கொண்டு வருவேன். திண்டிவனம்-நகரி ரயில் பாதைத் திட்டத்தை விரைந்து முடிக்க பாடுபடுவேன் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com