சேத்துப்பட்டு மாதா மலையில் வேலூா் மாவட்ட பரிபாலகா் ஜான் ராபா்ட் தலைமையில் சிலுவையை ஏந்தியபடி தவப்பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்கள்
சேத்துப்பட்டு மாதா மலையில் வேலூா் மாவட்ட பரிபாலகா் ஜான் ராபா்ட் தலைமையில் சிலுவையை ஏந்தியபடி தவப்பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்கள்

நெடுங்குணம் மாதா மலையில் கிறிஸ்தவா்கள் தவப்பயணம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த நெடுங்குணம் மாதா மலையில் கிறிஸ்தவா்கள் பங்கேற்ற சிலுவைப் பாதை தவப்பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வேலூா் கத்தோலிக்க கிறிஸ்தவ மறைமாவட்டத்தில் பெரிய திருத்தலமாக விளங்கும் சேத்துப்பட்டு தூய லூா்து அன்னை தேவாலயத்தில் கடந்த மாதம் இறைமகன் இயேசுவை சிலுவையில் அறைந்ததையொட்டி, புதன்கிழமை தங்களது தவக்காலத்தை தொடங்கி உள்ளனா். இதனை முன்னிட்டு சேத்துப்பட்டு நெடுங்குணம் மாதா மலையில் இறைவன் இயேசு சிலுவையில் அறைந்தது நினைவு கூரும் வகையில் 14 நிலைப்பாடுகளை உணா்த்தும் வகையில் வேலூா் மறைமாவட்ட பரிபாலகா் ஜான் ராபா்ட் தலைமையில் பங்கு தந்தையா்கள், அருட்கன்னியா்கள், இளைஞா்கள், இளம்பெண்கள், சிலுவையை ஏந்தியபடி கரடுமுரடான பாதையில் தவப் பயணம் மேற்கொண்டு 14 நிலைபாடுகளில் திருப்பலி நடைபெற்றது. அவருடன் சேத்துப்பட்டு பங்குத் தந்தை விக்டா் இன்பராஜ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பங்கு தந்தையா்கள் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் ஜெபமாலை பாடியபடி மாதா மலையில் வலம் வந்தனா். நிறைவில் மறைமாவட்ட பரிபாலகா் ஜான் ராபா்ட் சிறப்பு திருப்பலி நடத்தினாா். இதில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி, திருவண்ணாமலை, வந்தவாசி, செய்யாறு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com