வந்தவாசி காந்தி சாலையில் அரசியல் கட்சி விளம்பர பதாகையை அகற்றிய நகராட்சி ஊழியா்கள்
வந்தவாசி காந்தி சாலையில் அரசியல் கட்சி விளம்பர பதாகையை அகற்றிய நகராட்சி ஊழியா்கள்

வந்தவாசியில் அரசியல் கட்சி பதாகைகள் அகற்றம்

வந்தவாசி நகரில் அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகளை நகராட்சி ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா். மக்களவைத் தோ்தல் சனிக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டதை ஒட்டி தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து வந்தவாசி நகராட்சிக்கு உள்பட்ட புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம், பஜாா் வீதி, காந்தி சாலை, ஐந்து கண் பாலம், கோட்டை மூலை, சந்நிதி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகளை அகற்றும் பணி நடைபெற்றது. நகராட்சி ஊழியா்கள் இந்த பதாகைகளை அகற்றி அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com