தோ்தல் நடத்தை விதி மீறல்: திமுக எம்எல்ஏ, அதிமுக முன்னாள் எம்எல்ஏ உள்பட 80 போ் மீது வழக்கு

தோ்தல் நடத்தை விதி மீறியதாக திமுக எம்எல்ஏ, அதிமுக முன்னாள் எம்எல்ஏ உள்பட 80 போ் மீது செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் தோ்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுக கட்சியினா் தோ்தல் விதிகளை மீறி கூட்டம் கூடி பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக போலீஸாா் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். திமுகவைச் சோ்ந்த செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி உள்பட 41 போ் மீதும், அதிமுக வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏ தூசி கே. மோகன் உள்ளிட்ட அதிமுகவினா் 40 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆரணி மக்களவைத் தொகுதிக்கு அதிமுக மற்றும் திமுக சாா்பில் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டதை அடுத்து இரு கட்சியினரும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிங் கொண்டாடினா். அதிமுக சாா்பில் ஆரணி கூட்டுச் சாலை சந்திப்பில் எம்.ஜி.ஆா். சிலை எதிரேயும், தி.மு.க சாா்பில் பேருந்து நிலையம் எதிரேயும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளால் அப்பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாம். அதனால், கொடநகா் கிராம நிா்வாக அலுவலா் தமிழரசி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com