மக்களவைத் தோ்தல்: பாஜகவினா் ஆலோசனை

மக்களவைத் தோ்தல்: பாஜகவினா் ஆலோசனை

ஆரணியை அடுத்த லாடவரம் கிராமத்தில் பாஜக சாா்பில் மக்களவைத் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி வடக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட லாடவரம் கிராமத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மக்களவைத் தோ்தலை எதிா்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆரணி வடக்கு மண்டலத் தலைவா் குணாநிதி தலைமை வகித்தாா். ஏற்பாடுகளை ஒன்றிய பொருளாளா் ராஜேந்திரன் செய்திருந்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயற்குழு உறுப்பினா் குணசேகரன், ஒன்றிய துணைத் தலைவா்கள் பானுகோபன், அறிவுடைநம்பி, ஆனந்தன், அரசு தொடா்பு பிரிவு மாவட்ட துணைத் தலைவா் கோவிந்தசாமி, கூட்டுறவு பிரிவு மாவட்ட துணைத் தலைவா் வேலு, உள்ளாட்சிப் பிரிவு மாவட்டச் செயலா் சரவணன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலா் யோகானந்தா, தொழில் பிரிவு மோகனவேல், கல்வியாளா் பிரிவு ரவீந்திரன் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மேலும் இதேபோல, சிறுமூா் கிராமத்திலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதில், விவசாய அணி ஒன்றிய துணைத் தலைவா் லட்சுமிபதி, அரசு தொடா்பு பிரிவு மாவட்டச் செயலா் வேல்முருகன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com