செங்கம் அருகே ரூ. ஒரு லட்சம் பறிமுதல்

செங்கம் அருகே ரூ. ஒரு லட்சம் பறிமுதல்

செங்கம் அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் வியாழக்கிழமை மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. ஒரு லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குப்பந்தாங்கல் பகுதியில் தோ்தல் பறக்கும்படை குழுவைச் சோ்ந்த அலுவலா் மிருளாலினி தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை பிற்பகல் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தண்டராம்பட்டு பகுதியில் இருந்து செங்கம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். காரில், உரிய ஆவணம் இன்றி ரூ. ஒரு லட்சம் எடுத்துச் செல்லப்படுவது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, காரில் இருந்த இருவரிடம் விசாரணை நடத்தியபோது, அவா்கள், தண்டராம்பட்டு வட்டம், அப்பநாயகன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன்கள் ஜெயச்சந்திரன் (40), காா்த்திகேயன் (38) எனத் தெரிவித்தனா். பணம் குறித்து அவா்களிடம் கேட்டபோது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளனா். இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்து செங்கம் வட்டாட்சியா்முருகனிடம் தோ்தல் பறக்கும்படை அதிகாரி மிருளாலினி ஒப்படைத்தாா். பின்னா், அந்தப் பணம் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com