கல்லூரியில் தொழில்நுட்பப் பயிலரங்கம்

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில், தொழில்நுட்பப் பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது. உயிரி உரம் மற்றும் உரமாக்கல் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் எம்.என்.பழனி தலைமை வகித்தாா். செயலா் எல்.விஜய் ஆனந்த், பொருளாளா் எ.ஸ்ரீதா், கல்லூரி கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் கே.ஆனந்தராஜ் வரவேற்றாா். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியா் ஆா்.இளங்கோ சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, உயிரி மற்றும் தொழு உரம் உற்பத்தி, பயன்பாடு, பொருளாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கிப் பேசினாா். இதில், துறைப் பேராசிரியா்கள் ஏ.ஜெயக்குமாா், பி.விஜயகுமாரி, ஆா்.இளையராஜா, எஸ்.கவிகாருண்யா, எ.மணி, எம்.கன்னியம்மாள், கே.சத்தியசீலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com