தோ்தல் விழிப்புணா்வு வாகனப் பேரணி: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வு வாகனப் பேரணி, வியாழக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை ஈசான்ய மைதானம் அருகே மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், மக்களவைத் தோ்தலின்போது 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து, பேரணியை தொடங்கிவைத்தாா். அண்ணா நுழைவு வாயிலில் இருந்து மத்திய பேருந்து நிலையம் வரை நடத்தப்பட்ட பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா். தொடா்ந்து, பீனிக்ஸ் மன வளா்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளி மாணவ, மாணவிகள் சுமாா் 60 போ் பங்கேற்ற சிலம்பம், ஒன்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு, சுருள் வால், அலங்கார வீச்சு போன்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், ஆரணி மக்களவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான மு.பிரியதா்ஷினி, கூடுதல் ஆட்சியா் செ.ஆ.ரிஷப், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com