இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

வந்தவாசியில் இளைஞா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசி வீராசாமி முதலி தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் பிரேம்குமாா்(33). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி பிரியா மற்றும் இரு மகன்கள் உள்ளனா். கடந்த சில மாதங்களாக இவா் வேலையில்லாமல் இருந்ததால் விரக்தியாக இருந்துள்ளாா். இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை பிரேம்குமாா் வீட்டில் தூக்கிட்ட நிலையில் கிடந்ததை கண்ட உறவினா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் பிரேம்குமாா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com