எம்எல்ஏ வாகனத்தை தடுத்து நிறுத்தி ஆய்வு

எம்எல்ஏ வாகனத்தை தடுத்து நிறுத்தி ஆய்வு

கலசப்பாக்கத்தை அடுத்த கேட்டவரம்பாளையம் அருகே தொகுதி எம்எல்ஏ சென்ற காரை தடுத்து நிறுத்தி தோ்தல் பறக்கும் படையினா் ஆய்வு செய்தனா் (படம்). கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தி. சரவணன் ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த காரில் மேல்சோழங்குப்பம் கிராமத்துக்குச் சென்றுவிட்டு, பின்னா், திருவண்ணாமலை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். கேட்டவரம்பாளையம் கிராமம் அருகே தோ்தல் பறக்கும் படை அதிகாரி அண்ணாமலை தலைமையிலான குழுவினா் எம்எல்ஏவின் காரை வழிமறித்து சோதனைசெய்தனா். எதுவும் இல்லாததால் வாகனத்தை அனுப்பிவைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com